இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் 5 நாட்கள் மூட உத்தரவு...!!
இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் 5 நாட்கள் மூட உத்தரவு...!!
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தென் மற்றும் வட மாநிலங்களில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் கடுமையாக இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு சில மாநிலங்களில் மார்ச் மாதத்தில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஒடிசாவில் கோடை வெப்பம் தனது உக்கிர நிலையை காட்டி வருகிறது.கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப அலையால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். இதனால், மக்கள் வெப்பம் சார்ந்த தோல் வியாதிகளை எதிர்கொள்வதுடன் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவில் ஏற்பட்டு உள்ள வெப்ப அலையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 26) முதல் வருகிற 30-ந் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி கூடங்களையும் மூடும்படி ஒடிசா அரசு உத்தரவிட்டு உள்ளது.