+2 மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன் கடைக்கு சீல் வைக்க உத்தரவு..!!

+2 மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன் கடைக்கு சீல் வைக்க உத்தரவு..!!

Update: 2022-06-03 07:00 GMT

கடந்த 24-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்த கணேஷ் நண்பர்களுடன் காந்தி நகர் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற திருமுருகன் இரவு வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவரை பெற்றோர்கள் அருகே இருந்த மருத்துவமனைக்குக் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் திருமுருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக, மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக 5 ஸ்டார் எலைட் அசைவ உணவகத்தை மூடி சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. புகார் மீதான விசாரணை முடியும்வரை உணவகத்திற்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

Similar News