ஓசில்லாம் கெடையாது.. துட்டு கொடுத்து போட்டுக்கோங்க.. பொது சுகாதாரத் துறை அறிவிப்பு..!

ஓசில்லாம் கெடையாது.. துட்டு கொடுத்து போட்டுக்கோங்க.. பொது சுகாதாரத் துறை அறிவிப்பு..!

Update: 2022-05-19 06:40 GMT

‘தமிழகத்தில், 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படாது; ஆனால், தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம்’ என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 2021 ஜனவரி 16-ம் தேதி முதல் ‘கோவாக்சின்’, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

அதன் தொடர்ச்சியாக, 'கோர்பிவேக்ஸ்’ மற்றும் ‘ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது, ‘கோவோவேக்ஸ்' தடுப்பு மருந்து தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12 முதல் 17 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் 'கோவோவேக்ஸ்' தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். அதேபோன்று, 12 முதல் 17 வயது உடையவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக 'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசியை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

மேலும், 15 முதல் 17 வயது உடையவர்கள் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம்.

முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக போட்டுக் கொள்ளலாம்.

'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம். 18 முதல் 59 வயதிற்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட மாட்டாது; ஆனால், தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Similar News