நீச்சல் உடையில் கடலில் குளிக்கும் ஓவியா.. வைரலாகும் புகைப்படங்கள் !

நீச்சல் உடையில் கடலில் குளிக்கும் ஓவியா.. வைரலாகும் புகைப்படங்கள் !

Update: 2022-03-13 09:45 GMT

நடிகை ஓவியா கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

களவாணி படம் மூலம் திரைத்துறையில் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஓவியா. அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அங்கு தனது யதார்த்த நடவடிக்கையால் மக்களை கவர்ந்து மிகவும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது ஓவியாவுக்கு தான். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.
 
இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு தத்துவங்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 


மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்களை குவித்து வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News