பஞ்சாயத்து தலைவர் படுகொலை.. பயங்கர வன்முறை.. 10 பேர் உயிருடன் எரித்துக் கொலை..!

பஞ்சாயத்து தலைவர் படுகொலை.. பயங்கர வன்முறை.. 10 பேர் உயிருடன் எரித்துக் கொலை..!

Update: 2022-03-22 16:41 GMT

மேற்கு வங்க மாநிலம்  பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாது ஷெய்க். இவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

இந்நிலையில் நேற்று மாலை, மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் ஷெய்க் மீது வெடிகுண்டு வீசி  பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த பாது ஷெய்க் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கொலை சம்பவம் காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. போக்டுய் கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது.

இந்த தீவைப்பு சம்பவத்தில் 10 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். ஒரே வீட்டில் இருந்து 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News