ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை போக்குவரத்துத்துறை வெளியிட்டது .
அதில் 'பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அவரச கால அழைப்பு பொத்தான் மூலம் தகவல் தெரிவிக்கலாம்' என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மேலும் பேருந்தினுள் இந்த ஒலி ஏற்படும் போது அங்குள்ள நிலைமையை நடத்துனர் கண்காணித்து, அதற்கேற்ப காவல்துறை மற்றும் மருத்துவ உதவி (தேவைப்படும் பட்சத்தில்) கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்கப்பட்டவுடன் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கையை எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.