மகனின் சடலத்தை கொடுக்க லஞ்சம் கேட்டதால் பிச்சை எடுத்த பெற்றோர்!!
மகனின் சடலத்தை கொடுக்க லஞ்சம் கேட்டதால் பிச்சை எடுத்த பெற்றோர்!!
மகனின் சடலத்தை கொடுப்பதற்கு மருத்துவமனை ஊழியர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதால், பெற்றோர் பிச்சையெடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரான சஞ்சீவ் தாக்குர் (35) என்பவரை கடந்த இரண்டு வாரங்களாக காணவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் அவரது சடலம் முஸ்ரிகராரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது பெற்றோரை அழைத்த போலீஸார், இறந்து போனது அவர்களின் மகன் தான் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் அவரது உடல் சதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், மகனின் சடலத்தை வாங்குவதற்காக அவரது தந்தை மகேஷ் தாக்குர் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே சடலத்தை கொடுப்போம் எனத் தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்த கூலித் தொழிலாளியான மகேஷ் தாக்குர், ரூ.50 ஆயிரம் பணத்தை திரட்டுவதற்காக அதே பகுதியில் தனது மனைவியுடன் கடந்த 3 நாள்களாக பிச்சை எடுத்து வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் சஞ்சீவ் தாக்குரின் உடலை உடனடியாக அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு லஞ்சம் கேட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
newstm.in