பெற்றோரே கவனம்.. குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
பெற்றோரே கவனம்.. குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மளமளவென்று உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், நேற்று ஒரு நாள் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனையானது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பானது இணை நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது, நோயின் பரிணாம வளர்ச்சியால் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஒரு குடும்பத்தில் அதிக நபர்கள் இருக்கும் போது அனைவரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக நேர்கிறது.
தற்போது தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு ஆகியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இதனால், 10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதுமட்டுமில்லாமல், கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.