மக்களே ஷாக் நியூஸ்! உயரப்போகிறது விமான டிக்கெட் விலை!!
மக்களே ஷாக் நியூஸ்! உயரப்போகிறது விமான டிக்கெட் விலை!!
விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணம் விரைவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாதம் மாதம் விலை மாற்றும் அடிப்படையில் பிப்ரவரி 1ஆம் தேதி விமான எரிபொருள் விலை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் உள்நாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.86,038.2 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் ரூ.84,505.6 என்ற அளவில் தற்போது விமான எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் என்பது 8.5 சதவீத உயர்வு. அதாவது ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6,743.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு விமான நிறுவனங்கள் அதிருப்தியடைந்துள்ளன.
ஏற்கெனவே கொரோனா, ஊரடங்கு பிரச்னைகளால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள சூழலில், விமான எரிபொருள் விலையேற்றத்தால் இன்னும் செலவுகள் அதிகரித்து நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே விமானப் பயணங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழலுக்கு விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. விமான டிக்கெட்களுக்கான விலையை உயர்த்துவது குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அதுகுறித்து கோரிக்கை வைக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் விமான நிறுவனங்கள் துறைக்கு நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மாறாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாகவும், விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
newstm.in