மக்களே உஷார்..!! இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கபோகுது ..!!

மக்களே உஷார்..!! இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கபோகுது ..!!

Update: 2022-03-02 16:52 GMT

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, 4-ம் தேதி கடலூர் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில்  அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின்னர் இலங்கை - தமிழக கடற்கரை நோக்கி நகரலாம் என்பதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News