மக்களே உஷார்..!! ஒரு ஐபோன் வாங்க இளம்பெண் செய்த காரியத்தை பாருங்க...!!

மக்களே உஷார்..!! ஒரு ஐபோன் வாங்க இளம்பெண் செய்த காரியத்தை பாருங்க...!!

Update: 2022-03-18 05:55 GMT

காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தனியார் வாங்கி மேலாளர் கொடுத்த புகாரில், போலியான ஆவணங்கள் தயார் செய்து ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோன் வாங்கி, வங்கியை ஏமாற்றிய நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். 

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டை சேர்ந்த ராதிகா (37) போலிஸார் கைது செய்தனர்.

போலிஸாரின் புலன் விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த ராதிகா தனது உறவினரான நாகப்ரீத்தி என்பவரின் பான்கார்டினை உபயோகப்படுத்தி போலியான வாகன ஓட்டுநர் உரிமம், கார்த்திகேயன் பெயரில் வங்கி கணக்குகள் தயார் செய்து தனியார் வங்கியில் சமர்பித்து ரூபாய் 1,08,160/- மதிப்புள்ள ஐபோன் 10 மேக்ஸ்  செல்போனை வாங்கி, வங்கிக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது.

மேலும், ராதிகாவும் அவரது கணவர் கார்த்திக் என்பவரும் 2015, 2016ம் ஆண்டுகளில் லோன் பெற்று தருகிறேன் பாலிசி எடுங்கள் என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியிருப்பதும், இதேபோல் கார் லோன் வாங்கி மோசடி செய்திருப்பதும், சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் பல்வேறு பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்து பொருட்களை வாங்கி மோசடி செய்திருப்பதும், இது தொடர்பாக கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை, மதுரை போன்று பல இடங்களில் இவர்கள் மீது வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ராதிகா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 

Similar News