மக்களே உஷார்..!! திரையரங்குகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம்..!!

மக்களே உஷார்..!! திரையரங்குகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம்..!!

Update: 2022-06-29 14:14 GMT

தமிழ்நாட்டில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு அண்மைகாலமாக அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 8,970 ஆக அதிகரித்துள்ளது.

 

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா கால கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முககவசம் அணி வதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக நிறுவனங்களில் ஏசி வசதியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வருதுநகரிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகரில் திரையரங்குகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Similar News