மக்களே உஷார்..!! இந்த 3 நாட்கள் ரேஷன் கடை செயல்படாது..!!

மக்களே உஷார்..!! இந்த 3 நாட்கள் ரேஷன் கடை செயல்படாது..!!

Update: 2022-06-05 12:21 GMT

அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா்கள் சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,  தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் 7,8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார்.



அதேபோல ஜூன் 13-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் (கடையடைப்பு) நடைபெறும் என திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளனர்.

தொடர்ச்சியாக 3 நாள்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் அறிவித்துள்ள நிலையில் ஜுன் மாதத்துக்கான ரேஷன் பொருள்களை ரேஷன் அட்டைதாரர்கள் திட்டமிடல் அவசியமாகிறது.

Similar News