மக்களே அலெர்ட்.. இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
மக்களே அலெர்ட்.. இந்த 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இன்று (21-ம் தேதி) மிதமான மழை பெய்யும்.
அத்துடன் நீலகிரி,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று (21-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக மேற்கு தாம்பரத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. தரமணி, கொரட்டூரில் 11 செ.மீ மழையும், காட்டுக்குப்பம், தாம்பரம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், பூந்தமல்லி, அண்ணா பல்கலை, ஸ்ரீபெரும்புதூர், டிஜிபி அலுவலகம் பகுதிகளில் 9 செ.மீ மழையும் பெய்துள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.