மக்கள் அலறடித்து ஓட்டம்..!! மனைவியை கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வந்த கணவன்..!!
மக்கள் அலறடித்து ஓட்டம்..!! மனைவியை கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வந்த கணவன்..!!
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ராமேந்திரா யாதவ் என்பவரின் மனைவி ரீனா. இவர் நேற்று முன் தினம் வீட்டு வேலையில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ரீனாவை கடித்தது.
வலியால் அலறிய ரீனாவை, ராமேந்திரா மற்றும் குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே ரீனாவை கடித்த பாம்பை பிடித்த ராமேந்திரா, அதை ஒரு பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு உடன் எடுத்து சென்றார்.
இதையடுத்து ரீனாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராமேந்திரா கையில் வைத்திருந்த பாட்டிலில் பாம்பை வைத்திருந்ததால் மருத்துவமனையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
எதற்காக பாம்பை எடுத்து வந்தீர்கள் என மருத்துவர்கள் கேட்ட போது, என் மனைவியை என்ன பாம்பு கடித்தது என்று நீங்கள் கேட்டால் என்ன செய்வது? நீங்களே அதை பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் பாம்பைக் கொண்டு வந்தேன் என ராமேந்திரா கூறியுள்ளார்.