மக்கள் அதிர்ச்சி..!! சிமெண்ட் விலை மீண்டும் உயர்வு!!
மக்கள் அதிர்ச்சி..!! சிமெண்ட் விலை மீண்டும் உயர்வு!!
உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் நீடித்து வருகிறது. போர் காரணமாக சர்வதேச அளவில் வணிக ரீதியான பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ராம்கோ நிறுவனம் சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20-25 வரை உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது. இந்த அறிவிப்பால் வீடு கட்டுவோர் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.
இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
முதல் மற்றும் இரண்டாம் தர கம்பிகள் டன் ரூ.75,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ ரூ.95,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
M-sand (1 யூனிட்) ரூ.2,800க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.3,500க்கும், p-sand ரூ.3,500க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.4,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முக்கால் இன்ச் ஜல்லி ரூ.2,500ல் இருந்து ரூ.3,300ஆகவும், கிராவல் மண் 1 யூனிட் ரூ.1,500ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல் ஒன்று ரூ.8.50க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.11.50க்கும், மேலும், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே வீடு கட்டுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் சூழலில் சிமெண்ட் விலையும் உயர்ந்து நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது.