மக்களே உஷார்.. இங்கெல்லாம் நாளை (12ம் தேதி) கரண்ட் இருக்காது..!
மக்களே உஷார்.. இங்கெல்லாம் நாளை (12ம் தேதி) கரண்ட் இருக்காது..!
அரசனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்தப் பகுதிகளில் நாளை (12-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிவகங்கை மாவட்டம் அரசனுர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால், இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர் ஆகிய பகுதிகளில் நாளை (12-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.