மக்களே உஷார்.. தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு.. முகக்கவசம் அணிவது கட்டாயம்..!

மக்களே உஷார்.. தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பு.. முகக்கவசம் அணிவது கட்டாயம்..!

Update: 2022-04-20 11:20 GMT

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்திலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டாலும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 1.4 கோடி பேர் உரிய நேரத்தில் 2-ம் தவணை தடுப்பூசியும், 54 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம். தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை; அபராதம் விதிப்பதற்கு மட்டும் தான் அரசு விலக்கு அளித்துள்ளது.

தேவைப்பட்டால், தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Similar News