மக்களே உஷார்.. இன்று இந்த பக்கம் போகாதீங்க..!!
மக்களே உஷார்.. இன்று இந்த பக்கம் போகாதீங்க..!!;
மாமல்லபுரத்தில் 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது
இந்நிலையில், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று ஜூலை 28 நண்பகல் முதல் இரவு 9 மணி வரையில் இராஜா முத்தையா சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளதாவது :
- தேவை ஏற்படுமாயின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் இராஜா முத்தைய சாலை வழியாக அனுமதிக்கப்படாது. ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து இராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
- வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.
- பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.
- இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.
- சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.