மக்களே உஷார்.. தமிழகத்தில் 2,500-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு !!

மக்களே உஷார்.. தமிழகத்தில் 2,500-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு !!

Update: 2022-07-02 20:34 GMT

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,500 -க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 2,385- ஆக உயர்ந்த நிலையில் இன்றைய பாதிப்பு 2,500 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 13,319- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,372- ஆகும். தலைநகர் சென்னையில் நேற்று 1,025-பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,059- ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மட்டும் சென்னையில் 1,059 பேருக்கும், செங்கல்பட்டில் 393 பேருக்கும், கோயம்புத்தூரில் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
newstm.in

Similar News