மக்களே, மயக்கம் போட்டுடாதீங்க.. உயர்ந்தது ஜிஎஸ்டி வரி.. எதுக்கு எவ்வளவு தெரியுமா..?
மக்களே, மயக்கம் போட்டுடாதீங்க.. உயர்ந்தது ஜிஎஸ்டி வரி.. எதுக்கு எவ்வளவு தெரியுமா..?
சண்டிகரில் நேற்று (28-ம் தேதி) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல் நாளான நேற்று பல்வேறு பொருட்களுக்கான வரி அதிரடியாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 2-வது நாளான இன்று (29-ம் தேதி), மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்தி ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது.
அதன்படி, எல்இடி விளக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சில தோல் பொருட்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா, மை, கத்தி, பிளேடு, ஸ்பூன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிரைண்டர், அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், ரயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.