அதிர்ச்சியில் மக்கள்..!! மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.!!!

அதிர்ச்சியில் மக்கள்..!! மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.!!!

Update: 2022-04-02 05:00 GMT

புதுச்சேரியில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 2022-2023 ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காணொலியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டபோது, கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு இருந்த போதிலும்  மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி புதுச்சேரியில் வீட்டு உபயோக மின்கட்டணம் 100 யூனிட்டுக்குள் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101-ல் இருந்து 200 யூனிட் வரை ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 15 பைசா உயர்ந்து ரூ.2.75 ஆகவும் உயர்ந்துள்ளது.

201 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதேபோல் வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மின் கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.ஏற்கனவே பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை என எல்லாமே உயர்ந்த நிலையில் மின் கட்டண உயர்வு சாமானிய மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

Tags:    

Similar News