சென்னை மக்களே எச்சரிக்கை.. ஏறுமுகத்தில் கொரோனா பாதிப்பு..!
சென்னை மக்களே எச்சரிக்கை.. ஏறுமுகத்தில் கொரோனா பாதிப்பு..!
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு சில எண்ணிக்கைகளே அதிகரித்தாலும் பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூரில் ஒற்றை இலக்கத்திலேயே பாதிப்பு உள்ளது.
தேனாம்பேட்டை (29) மற்றும் அடையாறு (13) மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் உள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பானது, ஏப்ரல் 11-ம் தேதி முதல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இது அதிகப்படியான பாதிப்பாக இல்லாவிட்டாலும், நாள்தோறும் மெல்ல அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.