தொழிற்சாலை வாயு கசிவால் அவதியுறும் திருவொற்றியூர் மக்கள்!!
தொழிற்சாலை வாயு கசிவால் அவதியுறும் திருவொற்றியூர் மக்கள்!!
சென்னை திருவொற்றியூரில் நாளுக்கு நாள் தொடர்ந்து எரிவாயு கசிவு பரவி வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிப்படைகின்றனர்.
திருவொற்றியூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கழிவுகளே காற்றில் கலந்து அப்பகுதியில் பரவு வருவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள மக்கள் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் ஜீவன் லால் நகர், காலடிப்பேட்டை, சின்ன மேட்டுப்பாளையம், ராஜா கடை மாட்டு மந்தை ஆகிய பகுதியில் எரிவாயு கசிவின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் இதனால் நுரையீரல் பிரச்சனை, சுவாச கோளாறு உள்ளவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் விபத்துகள் எதுவும் ஏற்படுவதற்கு முன்னதாக இதனை தடுக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு துரிதமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர் ரங்கராஜனிடம் கேட்டபோது, திருவொற்றியூரில் கேஸ் வாசனை பரவுவதாக கூறப்படும் பகுதிகளில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் மூலமாக காற்றில் உள்ள மாசு துகள்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இந்த வாயு மாதிரிகள் மற்றும் மாசு துகள்கள் ஆய்வகத்தில் வைத்து சோதனை நடத்திய பிறகு, இரண்டு நாட்களுக்குள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.
newstm.in