திருச்சி மக்களே, இந்த பகுதிகளில் இன்று கரன்ட், குடிநீர் கட்..!
திருச்சி மக்களே, இந்த பகுதிகளில் இன்று கரன்ட், குடிநீர் கட்..!
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், மாநகராட்சிக்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று (14-ம் தேதி) ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் இரா.வைத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கையில், “கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (14-ம் தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இதனால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திற்குள் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லை நகர், அண்ணா நகர், புத்தூர், காஜாப்பேட்டை கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும், அய்யாளம்மன் படித்துறை கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ்நகர், பாரி நகர், பழைய எல்லைக்குடி, காவேரி நகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர், கே.கே கோட்டை மற்றும் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர் மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் இன்று (14-ம் தேதி) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.
நாளை (15-ம் தேதி) முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகின்றது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.