மக்களே.. இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயரப் போகுது..!

மக்களே.. இனி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயரப் போகுது..!

Update: 2022-05-09 12:20 GMT

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது.

வர்த்தக தொடக்கத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 51 பைசா சரிந்து 77.41 ரூபாயாக குறைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு குறைவால் இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவைகளின் செலவு அதிகரிக்கும்.

இதன் காரணமாக, கடந்த ஒரு மாதமாக உயர்த்தப்படாமல் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை இனி தினமும் உயர வாய்ப்பு உள்ளது.

Similar News