மக்களே, இந்த 3 நாள் ரேஷனில் பொருட்கள் கிடைக்காது..!
மக்களே, இந்த 3 நாள் ரேஷனில் பொருட்கள் கிடைக்காது..!
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வருகிற ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மாநிலம் முழுவதும் உள்ள பணியாளர்களை திரட்டி, ஜூன் 10-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வரை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.