மக்கள் அதிர்ச்சி ..!!அமெரிக்காவில் சீக்கியர்களை குறிவைத்து தாக்கும் கும்பல்..!!

மக்கள் அதிர்ச்சி ..!!அமெரிக்காவில் சீக்கியர்களை குறிவைத்து தாக்கும் கும்பல்..!!

Update: 2022-04-13 21:19 GMT

கடந்த 10 நாட்களுக்கு முன்னர், ரிச்மண்ட் ஹில் பகுதியில்  நிர்மல் சிங் என்ற 72 வயதான சீக்கிய நபர், அடையாளம் தெரியாத நபர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இப்போது அதே பகுதியில் மீண்டும் இரண்டு சீக்கியர்கள்  நேற்று  தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர்களிடமிருந்து சில பொருட்களை திருடிச் செல்ல வேண்டுமென்ற நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதிகாலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு சீக்கியர்களை, மர்ம நபர்கள்  கம்பால் தாக்கி அவர்களின் தலையில் கட்டப்பட்டிருந்த முண்டாசுகளை அவிழ்த்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்த ட்விட்டர் பதிவில், “இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த  தாக்குதல் வருந்தத்தக்கது. நாங்கள் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் குற்றச் செயல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிசியா ஜேம்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ரிச்மண்ட் ஹில்லில் நமது சீக்கிய சமூகத்திற்கு எதிரான மற்றொரு வெறுப்பூட்டும் தாக்குதல் இது. இதற்கு காரணமான இருவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்” என்று பதிவிட்டுள்ளார்.

நியூயார்க் மாநில அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பஞ்சாபி அமெரிக்கர், நியூயார்க் மாநில சட்டமன்ற பெண் உறுப்பினரான ஜெனிபர் ராஜ்குமார் கூறுகையில்,  “சமீப காலமாக சில ஆண்டுகளாக சீக்கிய சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் 200% அபாயகரமாக அதிகரித்துள்ளது.

எனது சீக்கிய அமெரிக்க குடும்பத்திற்கு எதிரான இரண்டு சம்பவங்களும் வெறுப்புக் குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முழு அளவில் தண்டிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த சீக்கியத் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


 


 

Tags:    

Similar News