மக்களே பயன்படுத்திக்கோங்க.. ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி..!!
மக்களே பயன்படுத்திக்கோங்க.. ஜூலை 15 முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி..!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னமும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தனர். கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூலம் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி காரணமாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக புதிது புதிதாக திரிபு அடைந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் என்பது மெல்ல அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முதலில் 2 தவணையாக தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தேவைப்படுவோருக்கு பூஸ்டர் டோஸும் போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜூலை 15-ம் தேதி தொடங்கி 75 நாள் பொதுமக்கள் இலவசமாக கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.