அரிசி ஒரு கிலோ 3 முதல் 5 வரை ரூபாய் உயர்கிறது - மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்!!

அரிசி ஒரு கிலோ 3 முதல் 5 வரை ரூபாய் உயர்கிறது - மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்!!

Update: 2022-07-18 14:01 GMT

கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, 5 சதவிகித வரி விதிப்பால், பிராண்ட் அல்லாத அரிசி, கோதுமை மாவு, தயிர், பன்னீர் ஆகியவற்றின் விலை உயரும்.

உலக வரைபடமான அட்லஸ், மேப்ஸ், வரைபடங்கள் 12 சதவிகித வரிவிதிப்பால் விலை உயரும். ஓட்டல் அறையின் தினசரி வாடகை 1,000 ரூபாய்க்குள் இருந்தால் 12 சதவிகித வரி விதிப்பால், வாடகை அதிகரிக்கும். வங்கிகள் காசோலை புத்தகம் வழங்க 18 சதவிகித வரிப் பிடித்தம் செய்யப்படும். அச்சு, எழுது மை, மார்க்கர், கத்தி, பிளேடு, பென்சில் ஷார்ப்னர், எல்இடி விளக்கு ஆகியவற்றின் ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்வதால் அவற்றின் விலை அதிகரிக்கும். சூரியசக்தி ஹீட்டர் மீதான வரி 5இல் இருந்து 12 சதவிகிதமாவதால் அதன் விலை உயரும்.பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார வாகனத்திற்கான 5 சதவிகித ஜிஎஸ்டி முற்றிலும் விலக்கப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 

புதிய வரியால் அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரிக்கும். ஏற்கெனவே கடும் விலைவாசி உயர்வால் பரிதவிக்கும் பொதுமக்கள் மேலும் சிரமப்படுவர். எல்லாவற்றுக்குமே ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டுமென்ற மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால், மக்களின் கடும் கோபத்திலிருந்து தப்ப முடியாது. எனவே, உடனடியாக புதிய வரி விதிப்புகளை வாபஸ் பெறுவது அவசியம்"என்று பதிவிட்டுள்ளார். 


 

Similar News