பெஷாவர் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு

பெஷாவர் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு

Update: 2022-03-04 21:01 GMT

பெஷாவர் மாகாணத்தில், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று வழக்கம்போல் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு திடீரென குண்டுவெடித்தது. இது குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 30 பேர் உயிரிழந்ததாக கூறிய நிலையில், தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இது ஒரு தற்கொலை தாக்குதல் என பெஷாவர் காவல்துறை அதிகாரி ஹரூன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
 

Similar News