அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் சார்பில் மனு!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் சார்பில் மனு!!

Update: 2022-07-05 11:11 GMT

அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி .பன்னீர் செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு அவசர வழக்காக நாளை விசாரிக்கப்பட உள்ளது.

.தி.மு..வில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தில் இருந்து வரும் நிலையில் .தி.மு.. பொதுக்குழு கூட்டம் வருகிற 11ஆம்  தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் .பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து தனி நீதிபதி முன் முறையிட்டார்.

அவசர வழக்காக எடுக்க வேண்டும் என .பன்னீர் செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்று நாளை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. .பன்னீர் செல்வத்தின் மனு அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வருகிறது.

ஜூலை 11இல் பொதுக்குழு நடைபெற இருப்பதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்தது என ஓபிஎஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட வேண்டும் என .பன்னீர் செல்வம் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

newstm.in


 

Similar News