இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!
இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!
நாடு முழுவதும் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல் நேற்று லிட்டர் ரூ.102.16க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 0.75 காசு விலை உயர்ந்து ரூ.102.91க்கு விற்கப்படுகிறது. டீசல் நேற்று லிட்டர் ரூ.92.19க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 0.76 காசு விலை உயர்ந்து ரூ.92.95க்கு விற்கப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தாமல் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து பாரதிய ஜனதா கட்சி 5 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை இனி தினமும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அப்படி அதிகரிக்கும் போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.
எப்படி பார்த்தாலும் கடைசியில் சாமானிய மக்கள் தான் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
வாக்கு வேண்டும் என்பதற்காக தேர்தல் நேரத்தில் விலையை உயர்த்தாத பாஜக அரசு, தற்போது ஆதாயம் எதுவும் இல்லை என்பதால் விலையை அதிகரிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
newstm.in