பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு!!
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு!!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
137 நாட்களுக்குப் பிறகு மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
சென்னையில் இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து ரூ.105.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 67 காசுகள் உயர்த்தப்பட்டு 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதன்படி, கடந்த 8 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4.54 ரூபாயும், டீசல் விலை 4.57 ரூபாயும் அதிகரித்திருப்பதால் மக்களை அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய பிறகும் 5 மாநில தேர்தல் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in