இன்றும் விலை உயர்ந்த பெட்ரோல், டீசல்!!
இன்றும் விலை உயர்ந்த பெட்ரோல், டீசல்!!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 110.9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து, நூறு ரூபாயைக் கடந்து, 100.18 ரூபாயக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த விலை உயர்வு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வால் நாட்டில் கிளர்ச்சி ஏற்படும் சூழல் உள்ளது. இப்படி செய்வது நிதியமைச்சகத்தின் அறிவு திவாலாகிவிட்டது என்பதையே காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in