பெட்ரோல், டீசல் விற்பனை திடீர் நிறுத்தம்.. வாகன ஓட்டுநர்கள் அவதி..!

பெட்ரோல், டீசல் விற்பனை திடீர் நிறுத்தம்.. வாகன ஓட்டுநர்கள் அவதி..!

Update: 2022-05-11 14:05 GMT

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள்  தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றது. போலீசார் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.

Similar News