இந்தியா - பிற நாடுகளின் பெட்ரோல் விலை.. ட்விட்டரில் பகிர்ந்து ராகுல் விமர்சனம்..!

இந்தியா - பிற நாடுகளின் பெட்ரோல் விலை.. ட்விட்டரில் பகிர்ந்து ராகுல் விமர்சனம்..!

Update: 2022-03-31 15:20 GMT

இந்தியா மற்றும் பிற நாடுகளின் பெட்ரோல் விலையை ட்விட்டரில் பகிர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில், 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோல் - டீசல் விலை நாள்தோறும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.6.05 காசுகளும், டீசல் விலை ரூ.6.09 காசுகளும் உயர்ந்துள்ளது. இதை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில்,
“இந்திய ரூபாயில் பெட்ரோல் விலை:
ஆப்கானிஸ்தான்: 66.99
பாகிஸ்தான்: 62.38
இலங்கை: 72.96
பங்களாதேஷ்: 78.53
பூடான்: 86.28
நேபாளம்: 97.05
இந்தியா: 101.81” எனப் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவின் மூலம், இந்தியாவில் தான் பெட்ரோல் விலை உச்சத்தில் உள்ளது.

Similar News