தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் மூடல்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

Update: 2022-06-16 11:36 GMT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் 26-வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது. அதன்படி இன்று (16-ம் தேதி), சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 26 நாட்களாக விலை மாற்றமின்றி இருப்பதால் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அத்துடன், எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு போதிய அளவு  பெட்ரோல் மற்றும் டீசல் அனுப்பாததால் தமிழகத்தின் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் ‘நோ ஸ்டாக்’ போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால், வாகன் ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News