தென்னங்கீற்றில் தேசிய தலைவர்களின் படங்கள்.. அசத்தும் தமிழ் இளைஞர்கள் !!

தென்னங்கீற்றில் தேசிய தலைவர்களின் படங்கள்.. அசத்தும் தமிழ் இளைஞர்கள் !!

Update: 2022-04-04 19:55 GMT

தென்னங்கீற்றில் தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து தமிழக இளைஞர்கள் அசத்தி உள்ளனர்.

திருச்சி மாவட்டம் விராலிமலை ரத்னா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜி (21). அதே பகுதியைச் சேர்ந்தவர் குகன் (21). சிறு வயது முதலே நண்பர்களான இவர்கள் இருவருக்கும் ஓவியம் வரைவதில் மிகவும் கொண்டவர்களாக உள்ளனர். 

இந்நிலையில் மற்றவர்கள் வரையும் ஓவியங்களிலிருந்து தாங்கள் வரையும் ஓவியம் தனித்துவம் வாய்ந்ததாகவும், கருத்துக்களை வெளிப்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று  எண்ணி அவர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளனர். அந்த முயற்சி இன்று சாதனையாக மாறி நாடு முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதாவது, வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்திலிருந்து தென்னங்கீற்றை பறித்து அதில் தேசிய தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக் ஆகியோரது படங்களை தத்ரூபமாக வரைந்து உள்ளனர். இவர்களின் இந்த புது முயற்சி பொதுமக்கள் மத்தியில் வியப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.  

newstm.in

Similar News