பரிதாபம்.. லாரிகள் நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் உடல் கருகி பலி..!
பரிதாபம்.. லாரிகள் நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் உடல் கருகி பலி..!
மகாராஷ்டிராவில், டீசல் லாரியும், மரம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் நகரின் புறநகர் பகுதியில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கரும், மரம் ஏற்றிச் சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று இரவு 10.30 மணியளவில் சந்திராபூர் - முல் சாலையில் இந்த விபத்து நடந்ததாக அவர் கூறினார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர், சில மணி நேரங்களுக்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் சந்திராபூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.