ஓசூரை பெங்களூருவாக மாற்ற திட்டம்.. தமிழக அரசின் மாஸ்டர் பிளான் !!

ஓசூரை பெங்களூருவாக மாற்ற திட்டம்.. தமிழக அரசின் மாஸ்டர் பிளான் !!

Update: 2022-02-24 08:45 GMT

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு பெரிய அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் நகரமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் கொண்ட இடமாக இருந்து வருவதால், நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இதனால் பெங்களூரு நகரம் என்பது, கர்நாடகத்திற்கு வருவாய் ஈட்டிதரும் நகரமாக உள்ளது. 

இந்த நிலையில், இதனை தமிழக அரசும் பயன்படுத்த உள்ளது. அதாவது, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தமிழகத்தை சேர்ந்த ஓசூர் பகுதியில் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க அங்குள்ள 4000 ஏக்கர் நிலம் வாங்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அரசு அங்குள்ள சூலகிரியில் 1000 ஏக்கரில் நிலம் வாங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் 3000 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே, சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மட்டுமே பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.

 
டாடா மற்றும் ஓலா நிறுவனங்கள், டைட்டன், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஸ்ரீ வாரு மோட்டார், அதெர், சிம்பில் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ஓசூரில் அமைந்துள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக இந்நிறுவனங்களை போன்றே பல நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவால், வரும் காலத்தில், சுமார் 25,000 கோடி முதலீட்டை ஈர்க்க முடியும் அதோடு, இதன்மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருக்கு அருகில் என்றால் அதிக பலன் கொடுக்கும் என்றும் தமிழக அரசு கருதுகிறது.


newstm.in

Similar News