வெளியானது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த மாவட்டம் எது தெரியுமா..?
வெளியானது பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்த மாவட்டம் எது தெரியுமா..?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 - 2022-ம் கல்வியாண்டுக்கான 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவிகள் 94.99 சதவீதமும், மாணவர்கள் 84.6 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அளவில், 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும், 95.44 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2 வது இடமும், 95.25 சதவீதம் தேர்ச்சி பெற்று மதுரை மாவட்டம் 3 வது இடமும் பெற்றுள்ளது.