ஆசிரியர் திட்டியதாக பிளஸ் 2 மாணவி தற்கொலை !

ஆசிரியர் திட்டியதாக பிளஸ் 2 மாணவி தற்கொலை !

Update: 2022-02-06 09:45 GMT

ஆசிரியர் திட்டியதாக பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி ஒருவரை 2 நாட்களுக்கு முன்பு கணித ஆசிரியர், சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மாணவி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

முன்னதாக தன்னுடன் பள்ளியில் படிக்கும் சில மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம், பள்ளியில் கணித ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொள்கிறேன், என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.
 


இதையடுத்து, மாணவியின் உறவினர் அளித்த புகாரின்பேரில், மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக கணித ஆசிரியர் சசிகுமார் மீது ஒரத்தநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட மாணவி உள்பட சில மாணவிகள் வகுப்பறையில் சேட்டை செய்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த கணித ஆசிரியர் மூன்று மாணவிகளையும் கண்டித்ததாகவும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறிவிடுவதாகவும் கூறியதாக ஆசிரியர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ஒரு மாணவி, சக மாணவிகளுக்கு  மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


newstm.in

Similar News