போலீசார் அதிரடி... கோயில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது !!
போலீசார் அதிரடி... கோயில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது !!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்ற பாலாஜி( 50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. வைத்தியநாதன் வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக பணி செய்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், பூசாரி வைத்தியநாதன் போலியாக முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக, பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (என்சிஎம்இசி சைபர் டைப்லைன்) என்ற அமைப்பினர் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக, வழக்குப்பதிவு செய்ததை அறிந்து வைத்தியநாதன் தப்பியோடியதாக கூறப்படுகிறது. எனினும் பாலாஜி பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் ஐ.பி (IP address) முகவரியின் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும் இவர் போலியாக முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கி அதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in