வருங்கால கணவனை கைது செய்த பெண் போலீஸ், இப்போது கைது!!

வருங்கால கணவனை கைது செய்த பெண் போலீஸ், இப்போது கைது!!

Update: 2022-06-06 06:45 GMT

மோசடி வழக்கில் வருங்கால கணவரைச் சிறையில் அடைத்த பெண் காவல் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூன்மோனி ரபா காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ராணா போஹட் என்பவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில்  ஜுன்மோனிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில், நீங்கள் திருமணம் செய்யப் போகும் ராணா போஹட் ஒரு மோசடியாளர்' என கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து தனது வருங்கால கணவர் குறித்து ஜுன்மோனி ரகசிய விசாரணை நடத்தினார்.

அப்போது ராணா, ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு, பலரிடம் வேலை வாங்கி தருவதாகக் கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது.

தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர் என்றும் பாராமல் ராணா போஹாட்டை ஜுன்மோனிஅதிரடியாகக் கைது செய்தார். இந்த சம்பவம் நடந்து ஒருமாதம் கழித்து தற்போது போலீஸ் அதிகாரி ஜூன்கோனி ரபா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலிஸ் அதிகாரி ஜுன்மோனி ரபா தனது வருங்கால கணவர் ராணா போஹாடுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஜூன்கோனி ரபாவை கைது செய்துள்ளனர்.

newstm.in

Similar News