நஸ்ரியா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பெண் மீது போலீஸ் வழக்கு!!
நஸ்ரியா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பெண் மீது போலீஸ் வழக்கு!!
மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் திரைப்படப் பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியானது. நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் 'ஆண்டே சுந்தரநிகி என்ற திரைப்படம் வெளியானது.
அந்த படத்தில் இடம்பெற்ற 'தந்தானந்தா' என்ற பாடலுக்கு இளம்பெண் ஒருவர் மெட்ரோ ரயிலினுள் நடனம் ஆடியுள்ளார். மேலும் ரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான 'விக்ரந்த் ரோனா' திரைப்படத்தில் இடம்பெற்ற "ரா ரா ராக்கம்மா" பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
Metro Dance: హైదరాబాద్ మెట్రో స్టేషన్లో యువతి నృత్యం.. చర్యలకు సిద్ధమైన అధికారులు pic.twitter.com/XKAc285Eyg
— Eenadu (@eenadulivenews) July 20, 2022
Metro Dance: హైదరాబాద్ మెట్రో స్టేషన్లో యువతి నృత్యం.. చర్యలకు సిద్ధమైన అధికారులు pic.twitter.com/XKAc285Eyg
— Eenadu (@eenadulivenews) July 20, 2022
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இணையவாசி ஒருவர், இது போன்று மெட்ரோ ரயில்களில் தொடங்கியுள்ளது என்றும், அதிகாரிகள் ஆக்ஷனுக்கு தயாராகுங்கள் என்றும் பதிவிட்டார்.
இதையடுத்து இது குறித்து முறையாக விசாரணை நடத்தி, அந்த இளம்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது. மேலும் காவல்துறையிலும் அந்த பெண் மீது புகாரளிக்கப்பட்டது.
💃 Dance On Hyderabad Metro 🚄
— Hi Hyderabad (@HiHyderabad) July 20, 2022
When did this happen??? pic.twitter.com/ZilPdia9fx
வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சிலர் பெண்ணுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த இளம்பெண் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவிப்பு உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in