காணாமல் போன குழந்தையை 30 நிமிடத்தில் கண்டுபிடித்த போலீஸ்!!

காணாமல் போன குழந்தையை 30 நிமிடத்தில் கண்டுபிடித்த போலீஸ்!!

Update: 2022-05-25 19:34 GMT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை 30 நிமிடத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் ரயில்வே போலிஸார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வினோத் குமார், லதா தம்பதியினர் குடும்பத்துடன் திருப்பதி சென்றனர். ஒன்றரை வயது மகனுக்கு மொட்டை அடித்த நிலையில் மீண்டும் விசாகப்பட்டினம் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர்.

இந்நிலையில் திடீரென குழந்தை காணாமல் போனதையடுத்து பெற்றோர்கள் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவியை அணுகினர்.

ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தையை மீட்க உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் செந்தில் குமரேசன் தலைமையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சி உதவியுடன் குழந்தையை சுமார் 30 நிமிடத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அவர்களை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜனசதாப்தி விரைவு ரயிலில் விசாகப்பட்டினம் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ரயில்வே போலீஸாருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Similar News