பிரபல பெண் இயக்குநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு!!

பிரபல பெண் இயக்குநர் மீது காவல்துறை வழக்குப்பதிவு!!

Update: 2022-07-05 10:51 GMT

இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கனடா முழுக்க சினிமா படிக்கும் மாணவர்களில் சிறந்தவர்கள் சிலரை தேர்தெடுத்து கனடா நாட்டின் பன்முக கலாசாரத்தை பற்றிய படங்களை எடுக்கும் முகாமில் பங்கெடுக்க `டோரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்' லீனா மணிமேகலைக்கு அழைப்பு விடுத்தது.

அந்த முகாமில் கலந்துக் கொண்டு தனது பங்களிப்பாக காளி என்ற படத்தை அவர் எடுத்துள்ளார். காளியாக அவரே நடித்து இயக்கி தயாரித்துள்ளார். ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம்.

அந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் காளி சிகரெட் பிடிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Arrestleenamanimekalai என்ற ஹேஷ்டேக்-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் படத்தை பார்த்தால் அனைவரும் love you leena manimekalai  என்ற ஹேஷ்டேக்-ஐ பதிவிடுவார்கள் என்றும், இன வேற்றுமைகளுக்கு மத்தியில் வெறுப்பை தேர்வு செய்யாமல் நேசத்தை தேர்ந்தெடுத்துள்ளதை பற்றி காளி ஆவணப்படம் பேசும் என்று லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் இவர் இயக்கிய மாடத்தி என்ற திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்

newstm.in

Similar News