திடீர் ஓய்வை அறிவித்தார் பொல்லார்டு!!

திடீர் ஓய்வை அறிவித்தார் பொல்லார்டு!!

Update: 2022-04-21 07:00 GMT

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர், கிரன் பொலார்ட் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33 வயதான பொலார்ட் 2007இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அவர் தனது கடைசி சர்வதேச ஆட்டத்தை இந்தியாவுக்கு எதிராக பிப்ரவரி 20 அன்று கொல்கத்தாவில் விளையாடினார்.

2021இல் இலங்கைக்கு எதிரான டி20 வெற்றியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியவர் இவர். பொலார்ட் 123 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2706 ரன்கள் எடுத்துள்ளார்.

101 சர்வதேச டி20 போட்டிகளில் 1569 ரன்களை எடுத்துள்ளார். பந்து வீச்சில் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் . பொலார்ட் மிகப்பெரிய பீல்டர், இவரது பீல்டிங்கிலேயே பல போட்டிகளை மே..தீவுகள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொல்லார்டு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கவனமாக ஆலோசித்த பிறகு, அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதற்கான நேரம் இது என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியை முன்னோக்கி கொண்டு செல்லும் இளம் வீரர்களுக்கு நான் வழி விடுகிறேன். நான் எப்போதும் என்னால் இயன்ற விதத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஆதரவளிப்பேன்.

எனது கனவை நனவாக்கியதற்கு நன்றியுடன், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் எனது மட்டையை உயர்த்துகிறேன் என்று றிக்கையில் தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News