பந்துவீசும்போது நடுவர் மீது எறிந்த பொல்லார்ட்.. வைரல் வீடியோ !!
பந்துவீசும்போது நடுவர் மீது எறிந்த பொல்லார்ட்.. வைரல் வீடியோ !!
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் மும்பை, சென்னை அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 56ஆவது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது 10ஆவது ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பொல்லார்ட் வீசினார்.
அந்த ஓவரின் 5ஆவது பந்தை வீச பொல்லார்ட் ஓடிவர, அவரது கையில் இருந்த பந்து தவறுதலாக பின்புறமாக சென்று நடுவர் மீது பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத நடுவர் திடீரென அச்சமடைந்த போதும், பந்து மெதுவாக தான் பட்டது. பின்னர் நடுவரிடம் உடனடியாக பொல்லார்ட்மன்னிப்பு கோர அதற்கு நடுவர் புன்னகைத்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Addicric (@addicric) May 9, 2022
newstm.in